search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்கம்பள்ளி சுரேந்தரன்"

    சபரிமலையில் இதுவரை 100 இளம்பெண்கள் வரை சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம் போர்டு மந்திரி கட்கம்பள்ளி சுரேந்தரன் தெரிவித்துள்ளார். #Sabarimala #KadakampallySurendran
    திருவனந்தபுரம்:

    கேரள தேவசம் போர்டு மந்திரி கட்கம்பள்ளி சுரேந்தரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், தேவசம் போர்டும் செய்துள்ளன.

    அங்கு தரிசனத்துக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்கள் போலீசாரை அணுகினால் அவர்கள் முழுமையான பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்த வகையில் இதுவரை 100 இளம்பெண்கள் வரை சபரிமலையில் தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே நோக்கமாகும்.

    ஆனால், சில குண்டர்களும், சமூக விரோதிகளும் இதை தடுக்க பார்க்கிறார்கள். அவர்கள் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

    பெண்கள் செல்வதை தடுப்பவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

    சங்பரிவார் அமைப்பினர் சபரிமலையில் வெறித்தனத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். எங்கள் அரசோ, போலீசோ அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #KadakampallySurendran
    ×